“நான் வாங்க மாட்டேன்”…. தவெக-வின் மாஸ்டர் பிளானை உடைத்த ராமதாஸ்… சவுமியா அன்புமணியின் தந்தைக்கு அமைந்த அதிர்ஷ்டம்…. பின்னணியில் ரகசிய டீல்?….!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை முதலில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கவே தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதன் பின்னணியில் அன்புமணி ராமதாஸைக் கூட்டணிக்குள் கொண்டுவரும் அரசியல் கணக்கு இருந்ததாகப் பேச்சுக்கள் உலா வருகின்றன. இருப்பினும், இந்த நகர்வை முன்கூட்டியே அறிந்த ராமதாஸ் இவ்விருதைப் பெறத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. அன்புமணியின் தந்தை பிடிகொடுக்காத இந்தச் சூழலில், வேறு வழியின்றி அவரது மாமனாருக்கு அந்த விருது வழங்கப்பட்டிருப்பதாகத் தற்போதைய அரசியல் வட்டாரங்களில் சுவாரசியமான விவாதங்கள் எழுந்துள்ளன.