“நோ ஃப்ரீபிஸ் (No Freebies)… ஒன்லி டெவலப்மென்ட்”…. திமுக-அதிமுக-வுக்கு டஃப் கொடுக்கும் விஜய்…. பிப். 27-ல் ரிலீஸாகும் தவெக-வின் 2026 தேர்தல் அறிக்கை….!

By Nanthini on மாசி 17, 2026

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் தீவிரமான வியூகங்களை வகுத்து வருவதாகத் தெரிகிறது. இதன் முக்கியக் கட்டமாக, வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தவெகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமான அரசியல் கட்சிகள் வழங்கும் மிகைப்படுத்தப்பட்ட இலவசத் திட்டங்களைத் தவிர்த்து, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான அம்சங்களுடன் இந்த அறிக்கை தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் பல தசாப்தங்களாக இலவசத் திட்டங்களை வைத்தே தேர்தல்களைச் சந்தித்து வரும் நிலையில், விஜய்யின் இந்த ‘மாற்று அரசியல்’ முயற்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவசங்களுக்குப் பழகிப்போன வாக்காளர்களை, தொலைநோக்குப் பார்வை கொண்ட தவெகவின் திட்டங்கள் எந்தளவுக்குக் கவரும் என்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது. திராவிடக் கோட்டையில் இலவசங்களின் தாக்கத்தை மீறி, விஜய்யின் தேர்தல் அறிக்கை ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.