தமிழகத்தில் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த TET தேர்வு தேதியை மாற்றம் செய்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சற்று முன் அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தேர்வுகளை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கல்லறை திருநாளன்று தேர்வு நடைபெற இருப்பதால் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் தலைவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
