தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பல வருடங்களாகவே செயலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ சேவைகள் பெறலாம். இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செயல்பாட்டில் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் காப்பீடு திட்டத்தை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது புதிதாக மனநல சிகிச்சைக்கும் இத்திட்டத்தை பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
காப்பீடு திட்டத்தில் கிட்டத்தட்ட 51 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது . இருப்பினும் , ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதற்காகவே இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது, உறுதிப்படுத்த பிரத்யேகமான செயலியை அரசு விரைவில் வெளியிட உள்ளது. திட்டத்திற்காக ரூ. 51 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் இல்லாத மன நோயாளிகளையும் காப்பீடு திட்டத்தில் சேர்க்குமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு அரசாணைக்கு வெளியிட்டுள்ளது.
5944 நோயாளிகள் சுமார் 108 மனநல காப்பகத்தில் உள்ளார்கள் இவர்களையும் இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் 54 அரசு மனநல காப்பகங்கள் உள்ளன இதில் இருக்கும் அனைத்து மனநலப் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்..
