எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவில் டெஸ்லா கார் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சார்ஜ் போடுவதற்கான சார்ஜிங் நிலையம் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. வாகனத்திற்கு சார்ஜ் போடும் வரை வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த நேரத்தில் அவர்கள் உணவு அருந்துவதற்காக பயன்படுத்தினால் பயண நேரம் மிச்சமாகும் என்பதை கருத்தில் கொண்டு TESLA Dinner-ஐ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டெஸ்லா நிறுவனம் தொடங்கி இருக்கிறது.
சார்ஜ் நிலையத்தில் வாகனத்திற்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் அதற்கு முன்பே அந்த நிலையத்திற்கு வருவது தொடர்பாகவும், உணவு தேவை என்றால் அது தொடர்பாக ஆர்டர் செய்தால் சார்ஜ் போடும் நேரத்தில் வாகனத்திற்கு உணவு வந்து சேரும். இல்லாவிட்டால் உணவகத்தில் சென்று சாப்பிடும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது முதல் கட்டமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் உலக அளவில் விரிவு படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…