சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சிக்கி ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனை அடுத்து விபத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்பதற்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளார்கள். மேலும் ஆலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
