சற்றுமுன் அதிர்ச்சி..! அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்..!!

By Soundarya on கார்த்திகை 30, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பிள்ளையார்பட்டியில் அரசுப் பேருந்துகள் இன்று  நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற பேருந்தும், எதிரே வந்த பேருந்தும் பயங்கரமாக மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் நிலவுகிறது. தற்போது சம்பவ இடத்திற்கு 6 ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ள நிலையில், அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.