ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 349 ரன்களை இந்தியா குவித்துள்ளது. ஜெய்ஸ்வால் ஏமாற்றம் அளித்தாலும், ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் அதிரடியாக ரன்களை குவித்தனர். ரோஹித் ஷர்மா(57) அரைசதம் அடிக்க, விராட் கோலி (135) சதம் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். கடைசியில் கேப்டன் ராகுல் அரைசதம் அடித்து சிறப்பான ஃபினிஷிங் டச் கொடுத்தார்.
