Categories: CINEMA

பீடி சுற்றும் தொழிலாளி மகள் செய்த சாதனை.. விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி.. குவியும் வாழ்த்துக்கள்..!

தென்காசியில் பீடி சுற்றும் தொழிலாளியை மகள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகிறார்கள். தனது 3-வது முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் கனவை நனவாக்கியுள்ளார் ஸ்ரீமதி. இந்திய நாட்டின் மிக உயரிய பணிகளில் ஒன்றாக கருதப்படுவது இந்திய ஆட்சிப் பணி. இதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று, அதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

நாட்டின் லட்சக்கணக்கானோர் இந்த தேர்வினை எழுதினாலும் சில நூறு பேர் மட்டுமே இந்த பணிக்கு தேர்வாகிறார்கள். அந்த அளவுக்கு இந்த தேர்வு மிகவும் கடுமையானதாக இருக்கும். சிவில் சர்வீஸ் என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட நாட்டின் உயரிய பணிகளுக்காக மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வு. 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வானது நடைபெற்று முடிந்த நிலையில் இந்த ஆண்டு 2016 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் ஏராளமானோர் வெற்றி பெற்று மத்திய அரசு பணிகளுக்கு தேர்வாகியுள்ளார்கள். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரது மகள் ஸ்ரீமதி. இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பீடி சுற்றும் தொழிலாளியான சீனிவாசன் மிகுந்த வறுமையில் தனது மகளைப் படிக்க வைத்தார்.

கணினி படிப்பில் பட்டம் பெற்ற ஸ்ரீமதி கோவை மண்டல பிஎஃப் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கிடைக்கும் நேரங்களில் மத்திய அரசு பணிகளுக்காக தயாராகி வந்த இவர் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றார். விரைவில் இவருக்கு பணி ஒதுக்கீடு முடிந்ததும் பணியில் சேர உள்ளார். இந்த செய்தி கேட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து கார்த்திக்கைத் தாக்கிய சீனியர் நடிகை… ஏன்னா அவர் பண்ண வேல அப்படி!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக…

1 hour ago

மணிரத்னத்தை மரத்தடியில் நிக்கவைத்து அவமானப்படுத்திய இளையராஜா…  கடுப்பாகி ஏ ஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்திய பாலச்சந்தர்!

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…

2 hours ago

கவர்ச்சி புயல் வீசுது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!!

நடிகை காவியா அறிவுமணி பாரதிகண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து…

12 hours ago

அடேங்கப்பா இத்தனை கோடியா..? அரண்மனை 4 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..? 9 நாளில் பட்டையை கிளப்பிய சுந்தர்.சி..!!

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான அரண்மனை 4 திரைப்படம் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த ஆண்டு தமிழ்…

13 hours ago

விஜய் டிவிக்கு போட்டியாக 9 போட்டியாளர்களை களமிறக்கும் சன் டிவி.. வெளியான அசத்தல் ப்ரோமோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு…

16 hours ago

என்ன ஐஸ்வர்யா கிளாமர் தூக்கலா இருக்கு.. லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி தொகுப்பாளராக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில்…

17 hours ago