Categories: சினிமா

கும்பகோணத்தில் பிறந்து அரசபரம்பரையில் மருமகனாக போகும் சித்தார்த் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாய்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கொடுத்தது.  இதைத்தொடர்ந்து ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவிய தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, அவள், அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை என்று ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மட்டுமின்றி பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். இந்த நிலையில், சித்தார் மற்றும் தெலுங்கு நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கூட இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

கார்த்தி நடிப்பில் வந்த காற்று வெளியிடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இந்தப் படத்தைத் தொடர்ந்து செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வந்த சைக்கோ படத்தில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ஹெய் சினாமிகா படம் வெளியானது. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் சொந்த வாழ்க்கையை பற்றி பார்க்கும் பொழுது முதலில் நடிகை  சுருதிஹாசன் உடன் காதல் வயப்பட்டார். பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். இவரை அடுத்து நடிகை சமந்தாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதுமட்டுமின்றி நடிகர் சித்தார்த்த 2003 ஆம் ஆண்டு மேக்னா நாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு சித்தார்த்துக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தற்பொழுது இவருக்கும் நடிகை அதிதி ராவுடன் திருமணம் நடைபெற இருக்கிறது இவர்களுக்கு தெலுங்கு தேசத்தில் பிரசித்தி பெற்ற ஒரு வெங்கடாசலபதி கோயிலில் தான் சமீபத்தில் நிச்சயம் நடந்தது .அந்த கோவில் அதிதியின் கொள்ளு தாத்தா கோயிலாம். அவர் அந்த ஊரின் சிற்றரசராக இருந்தவராம். தற்பொழுது தெலுங்கு தேசத்தின் அதுவும் அரச பரம்பரை மருமகனாக போகிறார் சித்தார்த். நடிகை அதிதியும் 2009 ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2013 ஆம் ஆண்டு அவரை  விவாகரத்து செய்தார். இருவருக்குமே இது 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Begam

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

2 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

2 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

3 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

3 மணத்தியாலங்கள் ago