BREAKING: வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்.. இந்தியன் ஆயில் நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு..!!

By Soundarya on பங்குனி 10, 2026

Spread the love

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் இந்த அசாதாரண சூழலால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நுகர்வோர் தங்களின் தேவைக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2026, மார்ச் 10-ம் தேதியிட்ட இந்த அறிவிப்பு வணிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.