தமிழகத்தில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அலர்ட்… யாரும் வெளியே போகாதீங்க..!

By Nanthini on ஆனி 20, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனிடையே தற்போது தமிழகத்தில் மழை குறைந்து மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இயல்பை விட வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப்படியான நிலையில் சென்னை, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் முடிந்த அளவிற்கு பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் இந்த நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.