தெலுங்கானாவில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோரை ஒரே ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் 23 பள்ளி மாணவர்களை மிக ஆபத்தான முறையில் ஏற்றிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் மாநில டி ஜே பி கொலை மற்றும் தற்கொலைகளை விட சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் நடைபெறுவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில் பள்ளி பைகள், உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் மாணவர்கள் எறும்பு கூட்டை போல மிக நெரிசலாக உள்ளே அமர்ந்து பயணிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி உள்ளே இருந்த மாணவர்களை எண்ணிய போது மொத்தம் 23 பேர் இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பாக வேறு இரண்டு வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சாலை விதிகளை மீறி பயணிகளை ஏற்றுவது சாலை பாதுகாப்பு விதிமீறல் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். அதேசமயம் ஆட்டோ ஓட்டுனர் மீதும் நடவடிக்கை பயந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A disturbing video from Nagarkurnool, Telangana, shows an autorickshaw crammed with schoolchildren along with their bags, lunch boxes, and water bottles. With rising transport costs for private English-medium schools, many parents are left with unsafe alternatives—putting young… pic.twitter.com/757o0CLG2E
— NewsX World (@NewsX) November 19, 2025
