“அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி பெண் சித்ரவதை”…. கணவனை விட்டு கொழுந்தனுடன் ஓட்டம்…. ஆத்திரத்தில் உறவினர்கள் செய்த கொடூரம்….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஐலாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பெண், தனது கணவரின் தம்பியான பொச்சய்யா என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி வீட்டை விட்டு மாயமானார். பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த கணவர், இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி ஜோதியும் பொச்சய்யாவும் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராயினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தாங்கள் இருவரும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியேறியதாகவும், இனி ஒன்றாகவே வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் இருவருக்கும் உரிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கி கவுன்சிலிங் அளித்து அனுப்பி வைத்தனர்.

   

காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய இருவரும் குடும்பத்தினருடன் செல்லாமல், தனியாக வீடு எடுத்து வசிக்கத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த பொச்சய்யாவின் உறவினர்களும் உள்ளூர்வாசிகளும் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதை அடுத்து ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஜோதி தாக்கப்பட்டதோடு, அவரது ஆடைகள் களையப்பட்டு உடலின் பல பகுதிகளில் மிளகாய்ப் பொடி மற்றும் ‘ஜீடி’ என்ற திரவம் தடவி சித்ரவதை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

   

இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த மேட்பள்ளி துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) ஏ. ராமுலு, சமூக வலைதளங்களில் பரவும் சாதி பஞ்சாயத்து மற்றும் ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படும் செய்திகள் உண்மையற்றவை எனத் தெரிவித்தார். குடும்பத் தகராறு காரணமாகவே பெண் தாக்கப்பட்டாரென்றும், அவரது முகத்தில் மட்டுமே மிளகாய்ப் பொடி வீசப்பட்டதாகவும் கூறிய போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பெற்று தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.