தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
