ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வரும் பிரவ்னா பட் (27) என்ற இந்திய வம்சாவளி வாலிபர், 14 வயது சிறுமி என நினைத்து ஆன்லைனில் தவறான முறையில் பழகிய குற்றத்திற்காகப் பிடிபட்டுள்ளார். அந்தச் சிறுமியின் வயது 14 என்று தெரிந்தே அவர் ஆபாசச் செய்திகளையும், காணொளிகளையும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு சந்திப்பு இடத்திற்கு அவர் வந்தபோது, அங்கு மறைந்திருந்த “பிரிட்டிஷ் தேசபக்தர்கள்” என்ற உள்ளூர் கண்காணிப்புக் குழுவினர் அவரைச் சூழ்ந்து மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள் பிடித்து விசாரிக்கும் போது, பிரவ்னா பட் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு, பயந்து நடுங்கியபடி மன்னிப்புக் கேட்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆன்லைன் உரையாடலின் போது சிறுமியின் வயது தெரிந்ததும் “நான் ஜெயிலுக்குத் தான் போவேன்” என்று சிரிப்பு எமோஜியுடன் அவர் அனுப்பியதும், பின்னர் தனது ஆபாச வீடியோக்களை அனுப்பி நேரில் வரச் சொல்லி வற்புறுத்தியதும் அம்பலமாகியுள்ளது. பிடிபட்ட போது, “இதுவே முதல் மற்றும் கடைசி முறை, தயவுசெய்து போலீசிடம் ஒப்படைக்க வேண்டாம்” என்று அவர் கெஞ்சுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் விசாவில் பிரவ்னா பட் இங்கிலாந்திற்கு வந்துள்ளார். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பிறகு, தற்காலிகப் படிப்புக்குப் பிந்தைய வேலை விசாவில் அங்கு தங்கியிருந்துள்ளார். சமீபகாலமாக வெளிநாட்டவர்கள் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதால், இங்கிலாந்திற்கு வரும் சர்வதேச மாணவர்களின் பின்னணி மற்றும் விசா கொள்கைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்ற விவாதமும், பொதுமக்களின் கண்டனங்களும் அந்நாட்டில் வலுத்து வருகின்றன.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…