“விவாகரத்தான பெண்ணுடன் காதல்…” திடீரென வெடித்த மோதல்…. காதலியை கொன்ற அடுத்த நொடியே… பதற வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 16, 2025

Spread the love

தலைநகர் டெல்லியில் உள்ள பஞ்சாபி பஹ் பகுதியைச் சேர்ந்த நீரஜ் (25) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விவாகரத்து பெற்ற இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீரஜிற்கும் அவரது காதலிக்கும் இடையே சில சலசலப்புகள் நிலவி வந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்று அந்தப் பெண்ணின் வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நீரஜ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியைச் சுட்டுள்ளார். இதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பிறகு, நீரஜ் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

   

இந்தச் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து நீரஜை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உயிரிழந்த இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்தக் கொலை மற்றும் தற்கொலை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.