நாடு எங்க போகுது..நிர்வாண வீடியோவை வைத்து வாலிபரை மிரட்டி பணம் பறித்த இளம்பெண்கள்.. அதிர்ச்சி பின்னணி..!!

By Divyamayakannan on புரட்டாதி 10, 2025

Spread the love

கேரளா, மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் மற்றும் மாவிலி கரையைச் சேர்ந்த  கவுரி நந்தா (20) இருவரும் பழகி வந்துள்ளனர். அதன் பெயரில் அந்த வாலிபரை வீட்டிற்கு வரவழைத்து கவுரி நந்தா வாலிபரை நிர்வாண படம் எடுத்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அந்தப் பெண் அவருடைய தோழி அனுஷ்கா (28) மற்றும் அனுஷ்கா கணவர் முகமது அபிப்(30) ஆகிய மூவரும் சேர்ந்து அந்த வாலிபரை நிர்வாண வீடியோவை காண்பித்து மிரட்டி உள்ளனர். நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிடுவோம் என மிரட்டி உள்ளனர். கையில் இருந்த பணத்தை கொடுத்து, மேலும் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.

அந்த பாதிக்கப்பட்ட இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அந்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல வேற யாரிடமும் செய்துள்ளார்களா, எவ்வளவு பேர் ஏமாந்து உள்ளார்கள், இன்று அவர்களுடைய போன் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து வருகிறார்கள். மூவரிடமும் தனித்தனியாக விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் கூறியுள்ளனர். .