கர்நாடக மாநிலம் பெங்களூரின் பகுதியை சேர்ந்த பிரேமானந்த் என்பவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இதனிடையே கடந்த 14 ஆம் தேதி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலமாக 1.86 லட்சத்திற்கு செல்போன் ஒன்றை அவர் ஆர்டர் செய்துள்ளார். தன்னுடைய கிரெடிட் கார்டு மூலமாக அவர் ஆர்டர் செய்தார். இந்நிலையில் அவர் ஆர்டர் செய்த செல்போன் பார்சல் கடந்த 19ஆம் தேதி மாலை அவருடைய வீட்டுக்கு வந்துள்ளது. அவரிடம் டெலிவரி ஊழியர் பார்சலை ஒப்படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த பிரேமானந்த் பார்சலை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அதில் செல்போனுக்கு பதிலாக வீட்டின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் டைல்ஸ் கல் ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது பற்றி தேசிய சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதேசமயம் போலீசிலும் அவர் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான முத்துக்காளை, இன்று காலை தனது மனைவியின் உடல்நிலை குறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை…
தமிழக பட்ஜெட்டில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் அல்லது நவம்பர் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் நேரிட்ட மிகக் கொடூரமான சாலை விபத்தில் இரண்டு பெண்கள்…
நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப…
நகரும் இரயிலில் பயணித்த பெண் ஒருவர், பாரம்பரிய 'வட் சாவித்திரி' பூஜையை இரயிலின் உள்ளேயே செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி…
நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து சென்னை கோட்டை தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் தினமும் பயணிப்பதால், சுமார் 17 கிலோமீட்டர்…