ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள உருக்கமான காணொளி, தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, இந்தியாவில் தொழிலாளர் உரிமைகள் குறித்த பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசுவாசமாகப் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர், தான் பணியிலிருந்து நீக்கப்பட்ட விதம் குறித்து கண்ணீர் மல்கக் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்தனை ஆண்டுகள் உழைத்த பின்பும், தனக்குக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வமான பலன்களான வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடை (Gratuity) போன்ற அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ பார்ப்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்திருப்பதோடு, ஒரு சாமானிய ஊழியரின் வாழ்வாதாரப் போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
एक Airtel पूर्व कर्मचारी का भावुक वायरल वीडियो सिर्फ एक व्यक्ति की कहानी नहीं, बल्कि देश में श्रमिक अधिकारों पर बड़ा सवाल खड़ा करता है
इस कर्मचारी का दावा है कि उन्होंने कंपनी में 17 साल तक काम किया, लेकिन नौकरी से निकालते समय उन्हें PF और ग्रेच्युटी जैसे जरूरी लाभ नहीं दिए… pic.twitter.com/CfKnSpT3Y4
— Munna Lal (@MunnaLal21) March 2, 2026
இந்தச் சம்பவம் வெறும் ஒரு தனிமனிதரின் ஆதங்கம் மட்டுமல்லாது, நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவும் தொழிலாளர் உரிமை மீறல்கள் குறித்த பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. பல ஆண்டுகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் ஊழியர்களுக்கு, உரிய பலன்களை வழங்காமல் வெளியேற்றுவது சமூக நீதிக்கு எதிரானது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்தக் காணொளி வேகமாகப் பரவி வருவதால், தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாகப் பின்பற்றுவது குறித்துப் பொதுமக்களிடையே காரசாரமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
