BREAKING: சின்னம்மை பாதிப்புள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

By Soundarya on பங்குனி 2, 2026

Spread the love

தமிழகத்தில் சின்னம்மை (Chickenpox) பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் உடலில் தோன்றும் கொப்புளங்கள் முழுமையாகக் காய்ந்து உதிரும் வரை, சுமார் 10 நாட்களுக்கு அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திப் பராமரிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த வைரஸ் பரவலைத் தடுக்க இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை முறையாக மூடிக்கொள்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நோய் முழுமையாகக் குணமாகும் வரை குழந்தைகள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதன் மூலம் மற்றவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.