திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி அந்த பகுதியில் உள்ள நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து திரும்பி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுமி தனியாக செல்வதை நோட்டமிட்ட நபர் ஒருவர் சிறுமியின் வாயை கையால் பொத்தி மாந்தோப்புக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.
இதனையடுத்து அந்த நபரை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். சிறுமி வீட்டிற்கு சென்ற போது மர்ம நபர் மாந்தோப்புக்கு தூக்கிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், ” என் பிள்ளையை அடித்து வாயெல்லாம் ரத்தம் வர வச்சு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். என் மகளுக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. என்னுடைய மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய நபரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். குற்றவாளியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
