மும்பையில் ரயிலில் பயணித்த பெண் பயணி மற்றொரு பயனியை மராட்டி பேசவில்லை என்று கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது மகாராஷ்டிரா மராட்டி பேசு. இல்லாவிட்டால் வெளியே போ என்று கூறும் வீடியோ இணையத்தில் வைரலான.து மேலும் இந்த வீடியோவில் பலரும் மராட்டி மொழியை கட்டாயமாக பேச வேண்டும் என்று வற்புறுத்துவதும் தெளிவாக தெரிகிறது. இதே நேரத்தில் மும்பை விக்ரோலி பகுதியில் மராட்டி மொழி இழிவுபடுத்தும் விதமாக நபர் ஒருவர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போட்டதாக கூறப்படும் விவகாரமும் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Mumbai Local: 'हिंमत असेल तर मराठीत बोल',लोकलमध्ये जागेवरून महिलांचं भांडणं#reels #reelsfeed#Bigbreaking #Mumbai #Session2025 #marathinews #newsupdate #lokshahimarathi pic.twitter.com/t4Pf2hvsDV
— Lokshahi Marathi (@LokshahiMarathi) July 18, 2025
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேம்சிங் தேவ்தா என்பவர் மராட்டி மொழியை குறை கூறியதாக கூறி மகாராஷ்டிரா நவநிர்மா சேனாவின் உறுப்பினர்கள் அவரை கடையை தாக்கியுள்ளார்கள். இதனை அடுத்து இந்த வீடியோவும் இணையத்தில் பரவி பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. பிறகு அந்த கடைக்காரர் காவல் நிலையத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
