ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் மாணவர்களுக்கு எழுத்து பிழையுடன் ஆங்கில வார்த்தைகளை கற்பிக்கக் கூடிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே சில மோசடி வேலைகள் பார்த்து பாடசாலைக்குள் ஆசிரியர்களாக வந்து அலப்பறை செய்யக்கூடிய ஆசிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்காக உள்ளே வந்து மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் தவறாக நடந்து கொள்வது, தூங்குவது மற்றும் அவர்களை வைத்து ரீல்ஸ் எடுப்பது போன்ற வேலைகள் தான் அதிகம் நடைபெறுகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி அரசு அவர்களை இடமாற்றம் செய்யும் வேலையும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆங்கில வார்த்தைகளை தவறாக எழுதிப் போட்டு படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தாய்மொழி எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு அவர்களுக்கு ஆங்கில அறிவும் அவசியமாகும். இதுபோன்ற தவறாக கற்பிக்கும் போது குழந்தைகள் எப்படி ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று மக்கள் கொந்தளித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோ வைரலான பிறகு கல்வித் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து குறித்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
அவர் வகுப்பு எடுத்த சமயத்தில் 42 குழந்தைகள் இருந்தனர் என்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியில் இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வி அறிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பள்ளிக்கு அனுப்பும் நிலையில் இது போன்ற ஆசிரியர்களின் செயல்களால் பெற்றோர்களுக்கு அரசு பள்ளியின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆர்வம் குறைந்து விடுகின்றது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…