குண்டூர் கிழக்குப் பகுதியில் உள்ள 71-வது வார்டு அரசுப் பள்ளியில் மதிய உணவுத் தரம் குறித்துப் புகார் அளித்த மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு தரமற்றதாக இருப்பதாகக் கூறி, மாணவர்கள் துணை மாவட்டக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர்கள், மறுநாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை வகுப்பறைக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், “எங்கள் மீதே புகார் அளிக்கிறீர்களா?” என்று கேட்டு ஆசிரியர்கள் தங்களை மிரட்டியதாகவும் மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/RTVnewsnetwork/status/2121452856637272411/video/1
ஆசிரியர்களின் இந்த நடவடிக்கையால் அச்சமடைந்த மாணவர்கள், நடந்த சம்பவம் குறித்துத் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த பெற்றோர்கள், மாணவர்களை மிரட்டி கல்வி கற்க விடாமல் தடுத்த ஆசிரியர்களின் போக்கைக் கண்டித்ததுடன், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…