சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் நான்காவது நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. டிபிஐ, கலெக்டர் ஆபீஸ்சை தொடர்ந்து எழிலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதுவரை 1046 ஆசிரியர்கள் மீது எஃப் ஐ ஆர் பதியப்பட்டுள்ள நிலையில் இன்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் சென்னை கடற்கரை சாலையில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
