இங்கிலாந்தின் ஹெர்ட்ஃபோர்ட்ஷயரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய டெபோரா ஃபிராங்க்ளின் (65) என்பவர், 1990-களில் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 9 முதல் 12 வயதுடைய சிறுவனைத் தனது படுக்கையில் கட்டிப்போட்டும், கண்களை மூடியும் பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். சிறுவனின் வீட்டிலும், தனது வீட்டிலும் வைத்துத் தொடர்ச்சியாக இந்த அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் சகோதரி காரில் இவர்களது முறையற்ற செயலைக் கண்டது உட்பட பல ஆதாரங்களின் அடிப்படையில், 2024-ல் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் இவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை ஃபிராங்க்ளின் மறுத்த போதிலும், ஆசிரியருக்குரிய நம்பிக்கைத் தன்மையைத் தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டதால் அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதி சிறைத் தண்டனை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருவதில் காவல்துறை உறுதியாக இருக்கும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளதாக அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
