BREAKING: நீட் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் ரத்து… CM விஜய் அறிவிப்பு…..!

By Nanthini on ஆவணி 2, 2026

Spread the love

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்பேரில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தகவலைத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள அமைச்சர் ராஜ்மோகன், நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் அரசாணை விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.