தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பு இணையத்தில் நீக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் TET தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நீக்கியது. தேர்வு அறிவிப்பில் சிறிய பிழைகள் இருந்த நிலையில் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நவம்பர் 20 நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பதிவிக்கான தாள்-I ஜனவரி 24 ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தாள்- II தேர்வு ஜனவரி 25 ஆம் தேதியும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் சிறப்பு டெட் தேர்வு அறிவிக்கையை இணையதளத்தில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியம் நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் அறிவிக்கையில் உள்ள பிழைகள் காரணமாக அறிவிப்பு நீக்கப்பட்திருக்கலாம் என்றும், சரிசெய்யப்பட்டு மீண்டும் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
