கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டை பகுதியை சேர்ந்த லட்சுமணன் நாயக் (40) என்பவருடைய மனைவி பத்மா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. பத்மா அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். லட்சுமணன் நாயக் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். மனைவி தனியாக வசித்து வந்ததால் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் உப்பந்தூர் அடுத்த அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் கோபி என்பவர் உடன் பத்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இந்த விவகாரம் லட்சுமணனுக்கு தெரிய வந்தது. இதனால் கள்ள காதலை கைவிடுமாறு அவர் தன் மனைவியை வற்புறுத்தி வந்துள்ளார். பத்மாவின் நடத்தையில் எந்த மாற்றப்படாததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லட்சுமணன் நாயக்கின் உறவினர்கள் பலமுறை இருவரையும் அழைத்து பஞ்சாயத்து செய்து சமாதானப்படுத்தி வந்துள்ளன. மனைவியை நடத்தையால் விரக்தி அடைந்த லட்சுமணன் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
கள்ள காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்த பத்மா தனது கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு லட்சுமன் நாயக் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கோபி தன்னுடைய தாய், தங்கை மற்றும் சகோதரருடன் பத்மாவதியின் வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தவரை வாயில் வலுக்கட்டாயமாக இரண்டு பாட்டில் மதுவை ஊற்றி குடிக்க வைத்துள்ளார். பிறகு அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். கொலை நடந்த இடத்தில் இரண்டு காலி மது பாட்டில்களையும் வைத்தனர். நேற்று காலை ஒன்றும் தெரியாதது போல பத்மா வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுவிட்டார்.
பள்ளியிலிருந்து கணவருக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்துள்ளார். பிறகு வீட்டில் உரிமையாளருக்கு போன் செய்து தன்னுடைய கணவர் போனை எடுக்கவில்லை வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். வீட்டில் உரிமையாளரும் லட்சுமி நாயகத்துக்கு போன் செய்தனர். போன் எடுக்காததால் மீண்டும் பத்மாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவசரமாக பத்மா பள்ளியிலிருந்து வீட்டுக்கு விரைந்த நிலையில் வீட்டில் கணவர் அதிக அளவில் மது குடித்து இறந்து விட்டதாக கூறி அழுது புரண்டு நாடகமாடியுள்ளார்.
லட்சுமண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் பத்மா காந்தி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
