சுக்குநூறான கனவுகள்…! “ஆசிரியராக பணியில் சேர்ந்த 10 நாட்களில்…” இளம்பெண் உள்பட 2 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!

Spread the love

தமிழகத்தில் கடந்த 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விழுப்புரம் தனலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசனின் மனைவி சிவரஞ்சனி, திருச்சியை சேர்ந்த நிஷா, கடலூரைச் சேர்ந்த கௌசல்யா, கள்ளக்குறிச்சி சேர்ந்த பூவிழி ஆகியோர் ஒரே காரில் செல்ல முடிவெடுத்தனர்.

இவர்கள் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் வந்த காரை சூர்யா என்பவர் ஓட்டி சென்றார். அந்த காரில் நிஷாவின் கணவர் ஷாகுல், கௌசல்யாவின் கணவர் எல்லப்பன், பூவிழியின் கணவர் முருகன் ஆகியோரும் இருந்தனர். இந்த நிலையில் அய்யூர் அகரம் என்ற இடத்தில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் சூர்யா காரை எதிர் திசை சாலையில் திருப்பினார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சாகுல், ஆசிரியை சிவரஞ்சனி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆசிரியராக பணியில் சேர்ந்து பத்து நாட்களில் சிவரஞ்சனி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Devi Ramu

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

5 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

5 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

5 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

5 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

5 மணத்தியாலங்கள் ago