பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் மலையாள சீசன் 7வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடில் வேத லட்சுமி வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் தனது வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவம் குறித்து கூறியுள்ளார். அதில் எனக்கு 10 வயதாக இருக்கும் போது என் அப்பாவுக்கு பரனாய்டு ஸ்கிசோபிரினியா என்ற மனநல பிரச்சனை இருப்பது தெரியவந்தது.
எனக்கு 23 வயதாகும் வரை என் பெற்றோர் ஒன்றாகவே வாழ்ந்தனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தனித்தனியாக வாழ தொடங்கினர். ஒரு நாள் என் தந்தையுடன் என் பட்டப்படிப்பு சான்றிதழை வாங்குவதற்காக பெல்காம் சென்றேன். நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம். அப்போது நான் பணத்தை எடுத்துச் செல்லவில்லை. நாங்கள் பாதி தூரம் சென்றபோது என் அப்பா என் மீது கோபத்தை காட்ட தொடங்கினார்.
காரணம் அம்மாவும் அப்பாவும் பிரிந்த போது நான் அம்மாவிற்கு துணையாக இருந்தேன். கோபத்தின் உச்சிக்கு சென்ற அப்பா திடீரென என்னை உதைத்தார். என்னை மோசமாக நடத்தினார். அந்த பயணத்தின் போது பல பிரச்சனைகளை சந்தித்தேன். ஒரு சக பயணி நான் அழுது கொண்டிருப்பதை பார்த்து என்னுடன் துணையாக வந்தார். அந்த பயணம் என் வாழ்க்கையே மாற்றியது.
என் அம்மாவையும் தங்கையையும் மனதில் வைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தேன். நான் அனுபவித்த அதே சூழ்நிலையை அவர்கள் சந்தித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் என் கனவுகளை ஒருபோதும் கைவிடவில்லை என லட்சுமி பேசினார். அவரது பேச்சைக் கேட்டு போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு அழுது அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…