“சின்ன பிள்ளையை இப்படியா அடிப்பீங்க…?” அலறி துடித்த மாணவி…. தனியார் பள்ளி ஆசிரியரின் வெறிச்செயல்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் கிளையில் இயங்கி வரும் ‘டெஜாவூ’ என்ற தனியார் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், அந்த மாணவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களைத் தாக்கினால் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள், ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாதா? வீட்டு ஆத்திரத்தைக் குழந்தைகள் மீது காட்டலாமா? என கேள்வி எழுப்பி, இச்சம்பவம் தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

   

இந்த விவகாரம் எக்ஸ் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மாணவியைத் தாக்கிய ஆசிரியர் மீது பீகார் காவல்துறை சட்டம் சார்ந்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.