துருக்கி நாட்டின் பாலகேசிர் மாகாணம் கோமேக் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் நடந்துள்ள கொடூரச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கே பணியாற்றும் ஆசிரியை ஒருவர், தனது தாயை இழந்து தவிக்கும் 5 வயது சிறுவன் ஒருவன் வகுப்பில் அழுதுகொண்டிருந்த போது அவனிடம் நடந்து கொண்ட விதம் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
https://twitter.com/xyer6haber/status/2109677911535984710?s=20
“உன் தாய் செத்தால் எனக்கு என்ன? இனிமேல் தாயை நினைத்து அழுதால் நீ பிறந்த நாளே உனக்கு வெட்கக்கேடாகிவிடும்” என அந்தச் சிறுவனை மிரட்டியதுடன், அவர் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த தகவல்களும் வீடியோ பதிவுகளும் இணையத்தில் வெளியாகித் தீயாய் பரவி வரும் நிலையில், குழந்தைகளைக் காக்க வேண்டிய இடத்திலுள்ள ஆசிரியரின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
