பள்ளி நடந்த பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிவந்துள்ளது. உதகை மாவட்டம் காத்தாடிமட்டம் அரசு பள்ளிக்கு பாலியல் கல்வி விழிப்புணர்வுக்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு நிகழ்ச்சியை நடத்திய பின்பு வெளிவந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செந்தில்குமார் தகாத இடங்களில் தொட்டதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் போலீசாரிடம் கூறியதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
