தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை எட்டுபுலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக விஜயா உள்ளார். இங்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு பாஸ்கர் என்பவரும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் வகுப்பு நடக்கும்போது போது ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை ஆசிரியர் பாஸ்கர் பக்கத்தில் இருந்து பாடத்தை படிக்கும்படி கூறியதாகவும் பிறகு அந்த மாணவி மீது கையை வைத்து தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பெற்றோர் தலைமை ஆச்சிரிய விஜயாவிடம்முறையிட்டுள்ளார் . ஆனால் அவர் இது குறித்து மேலதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லாததால் ஆத்திரமடைந்த மாணவியின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் ஆசிரியர் பாஸ்கர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
