தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மொன்தா’ புயலானது நாளை அதிக வேகத்துடன் கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூரில் மிக கனமழை பெய்யலாம் என்றும், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்நிலையில், நாளை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மழையை பெய்வதை பொறுத்து விடுமுறை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
