பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தியாவசந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (40). இவர் அப்பகாரனஹள்ளி கேட் பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியான முனியப்பா என்பவர் அடிக்கடி வந்து கடனுக்கு டீ குடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த 12-ஆம் தேதி முனியப்பா மீண்டும் மஞ்சுநாத்தின் கடைக்கு வந்து டீ கேட்டுள்ளார். அப்போது மஞ்சுநாத், ஏற்கனவே குடித்த டீக்காக ₹200 கடன் பாக்கி வைத்திருப்பதாகவும், முதலில் அந்த ₹200-ஐத் திருப்பித் தருமாறும் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த முனியப்பா, அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மஞ்சுநாத்தைத் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மஞ்சுநாத் உடனடியாகத் தொட்டபள்ளாப்புராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மஞ்சுநாத்தின் மரணத்தைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த முனியப்பாவை தொட்டபெலவங்களா போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெறும் ₹200 கடனைத் திரும்பக் கேட்ட காரணத்திற்காகவே இந்தத் துணிகரக் கொலை அரங்கேறியுள்ளது உறுதியானது. மேலும், கைது செய்யப்பட்ட முனியப்பா ஏற்கனவே தனது சொந்தத் தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறை சென்று, சமீபத்தில்தான் வெளியே வந்துள்ளார் என்பதும், தற்போது டீக்கடை உரிமையாளரைக் கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…
2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…
திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…
"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…