ஹைதராபாத்தில் நான்கு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 48 வயது டெய்லருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மாதுகர் என்ற டெய்லர் தன்னுடைய பக்கத்து வீட்டு சிறுமிகள் இருவரை தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு ஆடை தைத்து தருவதாக கூறி அக்காவை மட்டும் வெளியில் நிற்க வைத்துவிட்டு நான்கு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமியின் உடலில் இருந்த அடையாளங்களை வைத்தும் சிறுமியின் அக்கா சொன்ன தகவலை கேட்டும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால் சிறுமியின் பெற்றோர் டைலரிடம் கடன் வாங்கியதாகவும் அதை திருப்பி கேட்டதால் இப்படி ஒரு பொய்யான புகாரை கொடுத்ததாகவும் டெய்லர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆதரிக்கும் எந்த ஆதாரத்தையும் குற்றவாளி சமர்ப்பிக்க தவறிய நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை வைத்து டெய்லர் தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதை உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்த சிறுமிக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
