“கொஞ்சம் உதவி பண்ணுங்க…” பிளான் போட்டு காய் நகர்த்திய தம்பதி… வலையில் சிக்கிய திவ்யா…! பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2025

Spread the love

சென்னை மாவட்டம் கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபினாஷ். இவரது மனைவி செல்வி. இவர்கள் மாத ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்த நிலையில் நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த திவ்யா(43) என்பவர் 4 லட்சம் மற்றும் 5 லட்சம் என இரண்டு சீட்டுகளில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தார். இதற்கிடையே அவசரமாக பணம் தேவைப்படுகிறது எனக்கூறி செல்வியும், அவரது கணவரும் திவ்யாவிடம் இருந்து 3.5 லட்சம் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏழு சீட்டு முதிர்வடைந்த போது திவ்யா செல்வியிடம் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் செல்வியும் அவரது கணவரும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். ஏலச்சீட்டு பணம், தான் கடனாக கொடுத்த பணம் என மொத்தம் 12.5 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டபோது கணவன் மனைவி இருவரும் திவ்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவாகினர்.

   

இதுகுறித்து திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று செல்வியை கைது செய்தனர். செல்வி தனது கணவருடன் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் அபினாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.