தற்போது டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் வரவேற்பை விட விவாத நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி தற்போது கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்குப் போட்டியாக மற்றொரு டிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
அதன்படி இந்த வாரம் விவாதிக்கப்பட்டுள்ள தலைப்பு குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வாரத்தில் இறந்தவர்களுடன் பேச முடியும் என சொல்பவர்கள் மற்றும் அதை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்துள்ளது. இதில் தான் இறந்த ஆத்மாவை அரங்கத்திற்குள் கொண்டு வருவதாக கூறி பெண் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நபர் ஒருவரை தேங்காய் மீது அமர வைத்து ஒரு இறந்து போனவரை வரவழைத்து பேசி உள்ளார். அப்போது நீங்கள் பிளாக் மேஜிக்கால் இறந்திருக்கீங்க, அப்படி என்றால் சீக்கிரமாக போய் இறங்கி விடுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது தேங்காய் மீது அமர்ந்த நபரும் சட்டென்று கீழே இறங்குகின்றார். இதனை அவதானித்த எதிர்த் தரப்பினர் பல கேள்விகளை எழுப்பும் நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (40) மற்றும் செல்வின் (35) ஆகிய இருவருக்கும்…
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி…
24 ஆண்டுகளுக்குப் பிறகு, 'பிரண்ட்ஸ்' திரைப்படம் 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவம்பர் 21ஆம் தேதி மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், சென்னையில்…
கடந்த 2021-இல் 'முகில் பேட்டை' கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். இன்று தென்னிந்திய அளவில்…
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் விவகாரத்தில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து…
கலப்பட இருமல் மருந்துகளால் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.…