டிக்கெட் வாங்கிட்டு ரயிலை மிஸ் பண்ணிட்டீங்களா?… இதை பண்ணா உங்க பணம் உடனே திரும்ப கிடைக்கும்…!

Spread the love

இந்தியாவில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணிப்பதால் அவர்களின் பெரும்பாலானோருக்கு ரயில்வேயின் முக்கிய விதிகள் தெரிவதில்லை. டிக்கெட் இருந்தும் பலரும் ரயிலை தவற விடும்போது தங்கள் டிக்கெட் இப்போது பயனற்றது என நினைக்கிறார்கள். நீங்கள் ஒரு ரயில் டிக்கெட்டை வாங்கி விட்டு ஒருவேளை ரயிலை தவற விட்டால் வருத்தப்பட்டு டிக்கெட்டை தூக்கி எறிய வேண்டாம். நீங்கள் முன்பதிவு செய்யப்படாத அல்லது பொது பெட்டியை வாங்கி இருந்தால் ரயில்வே விதிகளின்படி உங்களுடைய டிக்கெட் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

அதே டிக்கெட் உடன் செல்லுபடி ஆகும் காலத்திற்குள் வேறு எந்த ரயிலின் பொதுப்பெட்டியிலும் நீங்கள் பயணிக்க முடியும். குறுகிய தூர டிக்கெட்டுகளுக்கு 3 மணி நேரமும், நீண்ட தூர டிக்கெட்டுகளுக்கு 24 மணி நேரமும் இந்த பலன் கிடைக்கும். இருந்தாலும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது. நீங்கள் முன்பதிவு செய்த ரயிலை தவறவிட்டால் உங்கள் டிக்கெட் பயனற்றதாகி விடாது. இதுபோன்ற சூழலில் TDR ஐ அதாவது டிக்கெட் டெபாசிட் ரசிதை தாக்கல் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திடம் உங்களுடைய டிக்கெட்டை திரும்ப பெற கோரலாம்.

இதற்காக ரயில் புறப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் TDR ஐ ஆன்லைனில் நிரப்ப வேண்டும். IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் இந்த செயல்முறையை நீங்கள் முடித்து விடலாம். சரியான காலகெடுவுக்குள் TDR தாக்கல் செய்தால் ரயில்வே உங்களுடைய பணத்தை திருப்பித் தரும். பொது டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதேசமயம் உங்கள் கவுண்டரில் இருந்து டிக்கெட் வாங்கி இருந்தாலும் நீங்கள் அங்கு சென்று TDR தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“அவங்க ட்ரூ கலர்ஸ் தெரிஞ்சிடுச்சு”… பாஜகவுடன் பின்வாசல் அரசியல்… திமுகவின் முகமூடியைக் கிழித்தாரா மாணிக்கம் தாகூர்? தமிழக அரசியலில் பரபரப்பு….!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம், தமிழக அரசியல் களத்தில் மிகப்பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

2 minutes ago

பாஜக-வையே ஓவர்டேக் செய்த ‘கரப்பான் பூச்சி பார்ட்டி’.. எக்ஸ் தளத்தைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமும் முடக்கப்பட்ட மர்மம்.. பகீர் பின்னணி…!!!

சமூக ஊடகங்களில் இயங்கும் சில இளைஞர்களைக் 'கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள்' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த்…

11 minutes ago

BREAKING: அதிமுகவுக்கு விழுந்த பலத்த அடி… முக்கிய நாடாளுமன்ற குழு தலைவர் திடீர் ராஜினாமா.. பின்னணியில் இருக்கும் ‘சாதிய’ அரசியல் பின்னடைவு…?

அதிமுக முன்னாள் எம்பி டாக்டர் வேணுகோபால் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் தற்போதைய தலைமை, உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தேர்தல் பின்னடைவுகள்…

14 minutes ago

முதலமைச்சர் விஜய் ஜாதகத்தில் இருக்கும் அந்த ‘ஒரு’ ஆபத்து…. ஜோதிடம் சொல்லும் அதிர்ச்சி உண்மை…!

தமிழக அரசியலில் மாபெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துள்ளார். கடவுள் நம்பிக்கையும், ஜோதிடக்…

19 minutes ago

“தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கு அவங்க தான் காரணம்..” TNEB-க்குள் இருக்கும் அந்த ‘கருப்பு ஆடுகள்’ யார்?.. அமைச்சர் நிர்மல்குமார் உடைத்த பகீர் ரகசியம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், அங்கு ஏற்பட்ட…

26 minutes ago

“5 வருஷம்லாம் தாங்காது.. சீக்கிரம் கவிழும்!” – தவெக ஆட்சியை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மிக விரைவில் கவிழும் என்று…

27 minutes ago