தற்போது டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் வரவேற்பை விட விவாத நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி தற்போது கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்குப் போட்டியாக மற்றொரு டிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
அதன்படி இந்த வாரம் விவாதிக்கப்பட்டுள்ள தலைப்பு குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வாரத்தில் இறந்தவர்களுடன் பேச முடியும் என சொல்பவர்கள் மற்றும் அதை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்துள்ளது. இதில் தான் இறந்த ஆத்மாவை அரங்கத்திற்குள் கொண்டு வருவதாக கூறி பெண் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நபர் ஒருவரை தேங்காய் மீது அமர வைத்து ஒரு இறந்து போனவரை வரவழைத்து பேசி உள்ளார். அப்போது நீங்கள் பிளாக் மேஜிக்கால் இறந்திருக்கீங்க, அப்படி என்றால் சீக்கிரமாக போய் இறங்கி விடுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது தேங்காய் மீது அமர்ந்த நபரும் சட்டென்று கீழே இறங்குகின்றார். இதனை அவதானித்த எதிர்த் தரப்பினர் பல கேள்விகளை எழுப்பும் நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாமகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அண்மையில்…
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.…
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை (மே 24) அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் ஆங்காங்கே நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையைக் குறிப்பிட்டு, அதிமுக…
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து…
தமிழக தேர்தல் அரசியலில் கூட்டணி கட்சிகள் பெரிய கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில்…