தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சியை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் அவர்களுடைய ஆட்சி காலம் முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தற்போது அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டன. அதன்படி இந்த முறை அதிமுக கட்டாயம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். இப்படியான நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் கட்சிக்குள் களை எடுக்கும் வேலையை இபிஎஸ் தொடங்கியுள்ளார்.
இப்படியான நிலையில் NDA கூட்டணியின் CM வேட்பாளர் இபிஎஸ் என அமித்ஷா நேரடியாக கூறாதது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இபிஎஸ் அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை ஏழாம் தேதி முதல் கொங்கு மண்டலத்திலிருந்து தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஈபிஎஸ் CM வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளாராம்.
