இப்படியா சாவு வரணும்?.. தேங்காயால் பரிதாபமாக உயிரிழந்த 7 வயது குழந்தை… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!

By Nanthini on ஆனி 30, 2025

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மாவடி பகுதியில் சுந்தர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகின்றார். இவருக்கு ஜீவானந்தம் என்ற ஏழு வயது மகன் உள்ள நிலையில் அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் அவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பட்டாணிதுரை மகன் நித்தின் ராஜ் (6) என்பவர் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த இரண்டு சிறுவர்களும் நேற்று முன்தினம் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடந்த தேங்காயிலிருந்து கடந்தை என்ற பிஷப வண்டு இரண்டு சிறுவர்களையும் கடித்துள்ளது.

இதனால் இரண்டு சிறுவர்களும் அலறி துடித்த நிலையில் அவர்களை உடனே சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை ஜீவானந்தத்திற்கு திடீரென்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஜீவானந்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரு சிறு பூச்சியால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.