“வெரி ராங் ப்ரோ.. பட்ஜெட்ல ‘வெற்றி’ போட்டா மட்டும் போதாது”…. CM விஜய்யை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை…!

Spread the love

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நடித்துள்ள ‘செய்… செய்யாதே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். போதைப்பொருள் தடுப்பு மற்றும் மருத்துவத் துறை தவறுகளைச் சுட்டிக்காட்டும் திரைப்படம் என்பதால் மருத்துவரான தான் இதில் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அவர், திரையுலகினர் அரசியலுக்கு வரும் இக்காலத்தில், அரசியல்வாதிகள் நடிப்பதற்கு வரும் சூழலும் உருவாகியுள்ளது என்று சுவாரசியமாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின்போது ‘விஜய் என்றால் வெற்றி’ எனக் குறிப்பிட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை, “எங்களைப் பொறுத்தவரை மோடி என்றாலும் வெற்றிதான்; தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்காக அரசு அறிவிக்கும் 150 திட்டங்களுக்கும் ‘வெற்றி’ எனப் பெயரிட்டுத் தன் கட்சியை நிலைநிறுத்த முனைவது தவறான அணுகுமுறை” எனக் விமர்சித்தார். மேலும், தமிழக அரசின் புதிய பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும், தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மேம்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பில்லை என்பதைச் சமீபத்திய சட்ட நடவடிக்கைகள் உணர்த்துவதாகத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்து மதத்தை இழிவாகப் பேசியதற்காகச் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட உள்ளதைக் சுட்டிக்காட்டிய அவர், எந்தவொரு மதத்தையும் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது என்றும், மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் இந்துக்களின் மத உணர்வுகள் தொடர்ந்து பாரபட்சமாக அணுகப்படுவதாகக் குற்றம்சாட்டிய தமிழிசை, மாநிலத்தில் மதச்சார்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான சம்பவங்கள் நடப்பதாகக் கவலை தெரிவித்தார். வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதி கோயிலில் வைத்துப் பூஜித்தபோது எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், நிதியமைச்சர் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்தபோது அமைதி காத்தது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், இரட்டை நிலைப்பாட்டைத் தவிர்த்து அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Nanthini

Recent Posts

“ஜனநாயகத்திற்கே ஆபத்தா?”…. தலைமைத் தேர்தல் ஆணையர் உடனே விலக மு.க.ஸ்டாலின் கெடு…. சற்றுமுன் பரபரப்பு….!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், SIR (சிறப்பு புலனாய்வு அறிக்கை) முறையிலான…

10 minutes ago

கடலூரில் பகீர்…. மயங்கிய நிலையில் கிடந்த 3 வயது சிறுமி.. பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி… 17 வயஸு சிறுவன் செய்த கொடூரம்…!

கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…

36 minutes ago

அய்யோ நீயெல்லாம் ஒரு மனுஷனா?…. தெருநாயை கோடாரியால் வெட்டி கொன்ற நபர்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டின் முன்பாகக் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கோடாரியுடன் வந்த நபர் ஒருவர்…

39 minutes ago

“பயப்படாதீங்க பாபு”…. நேரில் சென்று கையை பிடித்து தைரியம் சொன்ன முதல்வர் விஜய்….. MGM மருத்துவமனையில் நடந்தது என்ன…?

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் (MGM)…

50 minutes ago

ரூ. 70 கோடி டீலிங் தோல்வி?…. ஜெம் வீரமணி வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பிய விஐபி மகன்…. வெளியான லுக் அவுட் நோட்டீஸ்….. சற்றுமுன் பரபரப்பு….!

10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி உட்பட மூவரை காவல்துறையினர்…

57 minutes ago

தமிழக பாஜகவுக்கு புதிய மாஸ்டர் பிளான்…. டெல்லியில் இருந்து களமிறக்கப்பட்ட முக்கிய புள்ளி….வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு….!

பாஜகவின் தேசிய தலைமை, நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை நியமித்து…

1 மணத்தியாலம் ago