கோவையில் கல்லூரி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆளும் அரசை அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில், பாதுகாப்பிற்காக பெண்கள் துப்பாக்கியோடு தான் செல்ல வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்டது. இனிவரும் காலங்களில், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பெண்கள் துப்பாக்கியோடு தான் வெளியில் செல்ல வேண்டும்” என கடுமையாக சாடினார்.
