அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு, மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டதா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இராணுவ கட்டுப்பாடோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி நடத்தி கொண்டு இருக்கிறார்.
முதலமைச்சராக இருக்கும்போதே அம்மா ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? ஆண்டவனுக்கே வெளிச்சம். ஜெயலலிதாவை மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை கொடுத்தீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
