எந்த உயிரும் போயிறக்கூடாது.. இதெல்லாம் சரி பண்ணிக்கோங்க… விஜய்க்கு தமிழிசை அட்வைஸ்..!!

By Soundarya on மாசி 19, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதில் பங்கேற்க காவல்துறையினர் 20 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர். குறிப்பாக, முந்தைய கூட்டங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்களைக் கருத்தில்கொண்டு, 5,000 பேர் மட்டுமே பந்தலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தவெக தொண்டர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். “பொதுமக்கள் கூடும் இடங்களில் குடிநீர் வசதி மற்றும் காற்றோட்ட வசதிகள் சரியாக உள்ளதா என்பதை முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும்; கூட்ட நெரிசலில் எந்தவொரு உயிரும் பறிபோய்விடக்கூடாது” என அவர் எச்சரித்துள்ளார். மேலும், “எங்கள் கூட்டங்களுக்கும் பெருமளவில் மக்கள் வருவார்கள், அதனை நாங்கள் முறையாகக் கையாண்டு வருகிறோம்” எனக் குறிப்பிட்ட அவர், தவெகவினர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.