குஷியோ குஷி..! மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.4000 பணம் வந்துசேரும்… தமிழக அரசின் அசத்தல் திட்டம்..!!

By Soundarya on மாசி 19, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய நிதிச் சலுகையை அண்மையில் வழங்கியுள்ளது. அதன்படி, 1.31 கோடி பெண் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குகளில் பிப்ரவரி 13 அன்று ரூ. 5,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இந்தத் தொகையில் பிப்ரவரி மாதத்திற்கான ரூ. 1,000, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ. 2,000, மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கோடைகால சிறப்பு நிதியாக ரூ. 2,000 ஆகியவை உள்ளடங்கும். தேர்தல் நடைமுறைகளால் நிதி வழங்குவதில் தடங்கல் ஏற்படாமல் இருக்க இம்முயற்சி எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில் ‘திராவிட மாடல் 2.0’ திட்டத்தின் கீழ், மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். இந்தத் திட்டத்தின்படி உரிமைத் தொகை ரூ. 2,000-ஆக உயர்ந்தால், அத்துடன் ஆண்டுதோறும் வழங்கப்படும் கோடைகால சிறப்பு நிதி ரூ. 2,000-ஐயும் சேர்த்து, மே மாதங்களில் மட்டும் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 4,000 கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பெண்களின் நிதிச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.